ம.பி., கோவில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
ம.பி., கோவில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
ADDED : டிச 22, 2024 12:15 AM
உஜ்ஜைன்: மத்திய பிரதேசத்தில் உள்ள மஹாகாலேஸ்வர் கோவிலில், உணவு தயாரிக்கும் கூடத்தில் உள்ள இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி, பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ம.பி.,யின் உஜ்ஜைன் நகரில் மஹாகாலேஸ்வர் கோவில் உள்ளது.
இதன் அருகே 500 மீ., தொலைவில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு, ரஜ்னி காத்ரி, 30, என்ற பெண் ஊழியர் பணியாற்றி வந்தார். நேற்று இங்குள்ள சமையலறையில் பணியாற்றியபோது காத்ரி அணிந்திருந்த துப்பட்டா, உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் சிக்கி கழுத்தை இறுக்கியது.
இதையறிந்த மற்ற ஊழியர்கள் இயந்திரத்தின் செயல்பாட்டை நிறுத்தி, மயங்கி விழுந்த காத்ரியை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே காத்ரி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.