ADDED : நவ 22, 2024 10:17 PM
நொய்டா:ஆறு வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
நொய்டாவின் பாதல்பூர் அருகே கெதா தரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனம். இவருக்கு 2017ல் சாஹில் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், பெற்றோர் செய்து வைத்த அந்தத் திருமணத்தில், சோனத்துக்கு விருப்பம் இல்லை. இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், 2021ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சாஹில் சிறைக்குச் சென்றார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சோனு என்பவருடன் சோனம் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த சாஹில், மீண்டும் தன்னுடம் வந்து விடுமாறு கூறினார். சாஹில் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் கடும் அழுத்தத்தில் இருந்த சோனம், நேற்று முன் தினம் 6 வயது மகள், 4 வயது மகன் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். மேலும், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் சோனத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். சோனத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உடற்கூறு ஆய்வுக்குப் பின், இரு குழந்தைகள் உடல்களும் சாஹிலிடம் ஒப்படைக்கப்பட்டது.