ADDED : மார் 25, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டூர் : ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தின் கோலனுகொண்டா கிராமத்திற்கு அருகே உள்ள விஜயவாடா - குண்டூர் தேசிய நெடுஞ்சாலை அருகே, பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
டி.ஜி.பி., அலுவலகத்தையொட்டி உள்ள இந்த பகுதிக்கு சென்ற போலீசார், அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.
இவர், பாலியல் தொழிலாளியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. டி.ஜி.பி., அலுவலகம் அருகே நடந்த இந்த கொலை, ஆந்திர போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.