ADDED : ஜூன் 26, 2025 09:49 PM
புதுடில்லி:மருத்துவமனையில் சக நோயாளியால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை, அதே மருத்துவமனையின், அதே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது பயஸ், 23, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அதே மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, நியூ உஸ்மான்நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பின், உடல் நிலை மோசமானதை அடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜி.டி.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண், நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
இதையடுத்து, கச்சி காசூரி என்ற பகுதியை சேர்ந்த அந்த வாலிபர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நியூஉஸ்மான்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.