ADDED : அக் 17, 2024 09:40 PM
வெல்கம்:பீட்சாக்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டப்பட்டார்.
வடகிழக்கு டில்லியின் வெல்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவேத். இவரது மனைவி சாத்மா. நேற்று முன்தினம் இரவு ஜாவேத்தின் அண்ணன் ஜீஷன், தன் குடும்பத்தினர் அனைவருக்கும் பீட்சா வாங்கி வந்துள்ளார்.
அவற்றை தன் தம்பி மனைவியான சாத்மா உட்பட அனைவருக்கும் அவர் கொடுத்துள்ளார். இதனால் வருத்தமடைந்து ஜீஷனின் மனைவி சாதியா தகராறு செய்தார். இதை சாத்மா கண்டித்துள்ளார். இதனால் அவரிகளிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அவர்களை குடும்பத்தினர் சமாதானம் செய்தனர். அவரவர் அறைக்குச் சென்றனர். தன் அறைக்குச் சென்ற சாதியா, இதுகுறித்து தன் சகோதரர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது சகோதரர்கள் முந்தாஹிர், தஃப்சீர், ஷாஜாத், குல்ரேஜ் ஆகிய நான்கு பேரும் சாதியா வீட்டிற்கு வந்தனர். சாதியாவுக்கு ஆதரவாக சாத்மாவுடன் தகராறு செய்தனர். அப்போது அவரை முந்தாஹிர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சாத்மாவின் வயிற்றில் குண்டுபாய்ந்தது. காயமடைந்த அவர் ஜி.டி.பி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த போலீசார், முந்தாஹிர், தஃப்சீர், ஷாஜாத், குல்ரேஜ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
சாத்மாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.