ADDED : நவ 01, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த மண் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண், உயிருடன் மீட்கப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பைந்துாரை சேர்ந்தவர் ஆர்த்தி ஷெட்டி, 30. நேற்று காலை இரு சக்கர வாகனத்தில், நாகுருஉப்ரள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் மணல் ஏற்றி வந்த வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆர்த்தி ஷெட்டி மீது மோதி கவிழ்ந்தது.
இதில், வாகனத்தில் இருந்த மணல், ஆர்த்தி மீது விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக மணலை அகற்றி, அப்பெண்ணையும், அவரது வாகனத்தையும் மீட்டனர்.
காயமடைந்த அப்பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மணலால் மூடப்பட்ட இரு சக்கர வாகனம்.