குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு
குவைத்தில் வீட்டு சிறையிலிருந்த பெண் மத்தியமைச்சரால் மீட்பு
ADDED : ஜூலை 12, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:குவைத் நாட்டில் வீட்டில் சிறை வைக்கப்பட்ட பெண் ஒருவர் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் முயற்சியால் மீட்கப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் ராமக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவர் கண்ணூரைச் சேர்ந்த ஏஜன்ட் மூலம் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு சென்றார். அங்கு வீட்டில் சிறை வைக்கப்பட்டார். உணவு எதுவும் வழங்காமல் அவரை ஒரு குடும்பத்தினர் துன்புறுத்தினர்.
இது குறித்து ஜாஸ்மின் தோழி நெடுங்கண்டத்தை சேர்ந்த லிஷாவிடம் ஜூன் 15ல் அலைபேசி வாயிலாக தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபியின் கவனத்திற்கு லிஷா கொண்டு சென்றார். அவர் தலையிட்டு ஜாஸ்மினை நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி ஜாஸ்மின் நேற்று சொந்த ஊர் திரும்பினார்.

