தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு


UPDATED : நவ 23, 2026 07:16 PM

ADDED : நவ 23, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 07:16 PM ADDED : நவ 23, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குருகிராம்: ஹரியானா மாநிலம், குருகிராம் அருகே, அழுகிய நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குருகிராம் அருகே மானேசர் காசன் காட்டுப் பகுதியில், அழுகிய நிலையில் ஒரு உடல் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு, உடல் முழுதும் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிக் கிடந்த பெண் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீசார் கூறியதாவது:

அந்தப் பெண்ணின் முகம், காட்டு விலங்குகள் மற்றும் புழுக்களால் சிதைக்கப்பட்டுள்ளதால், அடையாளம் காண முடியவில்லை. அணிந்திருந்த ஆடைகள் மற்றும் உடலில் உள்ள அடையாளங்களை வைத்து, அவர் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படுகிறது. அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகியுள்ள, காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை ஆய்வு செய்து வருகிறோம். கொலை செய்யப்பட்டு காட்டில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும், உடற்கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us