தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது


ADDED : ஜன 26, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே; தாவணகெரேவின், கொடகனுாரு அருகில் உள்ள, தும்பி ஏரியில் மூன்று நாட்களுக்கு முன்பு, சாக்கு மூட்டை மிதந்தது.

இதை கண்ட கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், சாக்கு மூட்டையை நீரில் இருந்து எடுத்து சோதனையிட்டபோது, பெண்ணின் உடல் இருப்பது தெரிந்தது.

விசாரணை நடத்தியபோது, அந்த பெண் காவ்யா என்பதும், அவரை அவரது கணவரே கொலை செய்ததும் தெரியவந்தது.

கொடகனுார் கிராமத்தில் வசிப்பவர் சச்சின், 24. இவரது மனைவி காவ்யா, 21. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு திருமணம் நடந்தது. மனைவி இருந்தபோதும், அதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, 23, என்பவருடன், சச்சின் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த காவ்யா, கணவரை கண்டித்து, சண்டை போட்டார்.

தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் அவரை கொலை செய்ய சச்சினும், சைத்ராவும் திட்டமிட்டனர். அதன்படி காவ்யாவை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் போட்டு, கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியது, விசாரணையில் தெரிந்தது.

கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us