ADDED : ஆக 16, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருப்பது, நாடு முழுதும் உள்ள பெண்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகள் பாதுகாப்பு தருவது மோசமான செயல்.
பிரியங்கா, பொதுச்செயலர், காங்கிரஸ்
கண்ணியமே தற்போதைய தேவை!
தற்போதைய சிவில் சட்டத்தை மதவாத சட்டம் என்று பிரதமர் பேசியுள்ளார். விலைவாசியை குறைப்பது, இளைஞர்களுக்கு வேலை வழங்குவது, அனைத்து ஜாதியினருக்கும் உரிமைகளையும், கண்ணியத்தையும் பெற்றுத் தருவது தான் தற்போதைய தேவை.
அகிலேஷ் யாதவ்,தலைவர், சமாஜ்வாதி
அண்ணன் காயப்படுத்தினார்!
என் அண்ணன் அஜித் பவாருக்கு உறவையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க தெரியவில்லை. அதனால் தான் எனக்கு எதிராக லோக்சபா தேர்தலில் அண்ணியை நிறுத்தினார். இது எங்களை மிகவும் காயப்படுத்தியது.
சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி., --தேசியவாத காங்கிரஸ், சரத் பவார் அணி

