sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பு? எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை!

/

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பு? எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை!

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பு? எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை!

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைப்பு? எஸ்.ஐ.டி., விசாரணைக்கு கோரிக்கை!

1


ADDED : ஜூலை 18, 2025 01:57 AM

Google News

1

ADDED : ஜூலை 18, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'கர்நாடகாவின் தர்மஸ்தலாவில் இளம்பெண்களை கொன்று புதைத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, முதல்வர் சித்தராமையாவிடம், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோபால் கவுடா வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவில் புகழ் பெற்ற மஞ்சுநாதா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்த ஒருவர், தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் கடந்த 4ம் தேதி ஒரு புகார் அளித்தார்.

ரகசிய வாக்குமூலம்

அதில், 'கோவில் பக்கத்தில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையோரம், பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியரின் உடல்கள் போடப்பட்டு இருக்கும்.

'என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி, 1998 முதல் 2004 வரை, இப்படி இறந்து கிடந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்துள்ளேன். இதுபற்றி வெளியே கூறினால் கொன்று விடுவதாக, மேற்பார்வையாளர் என்னை பலமுறை மிரட்டி உள்ளார்.

'இதனால், 2004க்கு பின், உயிருக்கு பயந்து வேறு மாநிலத்திற்கு சென்று விட்டேன். என் மனசாட்சி உறுத்தியதால் இப்போது உண்மையை கூறி உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரில் என்ன கூறி உள்ளாரோ, அதையே கடந்த 6ம் தேதி பெல்தங்கடி நீதிமன்றத்திலும் ரகசிய வாக்கு மூலமாக அளித்துள்ளார்.

மேலும், உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதாகவும் கூறி உள்ளார். நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பின், புகார் கொடுத்தவர் மாயமாகி விட்டார்.

அவர், சிலரது கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று முன்தினம் போலீசாரும், புகார்தாரரும் வருவர் என்று கூறப்பட்டது. ஆனால் இருதரப்பினரும் அங்கு வரவில்லை.

பின்னணி மர்மம்

இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோபால் கவுடா, வக்கீல்கள் துவாரகாநாத், உமாபதி, சுதா கட்வா, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி ஆகியோர், முதல்வர் சித்தராமையாவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

அப்போது, 'தர்மஸ்தலாவில் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணியில் மர்மம் உள்ளது. தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் தர்மஸ்தலா எஸ்.ஐ., 28 வயதுள்ள நபர்.

'அவரால் இதுபோன்ற பெரிய வழக்கை திறம்பட விசாரிக்க முடியாது. இதனால் உயர் போலீஸ் அதிகாரி தலைமையில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

ஆலோசித்து முடிவு எடுப்பதாக, முதல்வர் உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில மகளிர் கமிஷன் தலைவி நாகலட்சுமி சவுத்ரியும், 'வழக்கு குறித்து எஸ்.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும்' என, முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புகார் அளித்த நபரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும், தட்சிண கன்னடா மாவட்ட போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த வழக்கை மூடிமறைக்க போலீசார் முயற்சி செய்வதாக, சில வக்கீல்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஆனால், இதை போலீசார் மறுத்துள்ளனர்.

வழக்கில் எழும் பல கேள்விகள்

'தர்மஸ்தலாவுக்கு 2003ம் ஆண்டு சென்ற தன் 20 வயது மகள் அனன்யா காணாமல் போனார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்' என, சி.பி.ஐ.,யில் ஸ்டெனோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுஜாதா பட் என்ற பெண், தட்சிண கன்னடா எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அனன்யா காணாமல் போய் 22 ஆண்டுகள் கழித்து புகார் அளித்திருப்பது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது.புகார் அளித்தவர் அதிகாரம் வாய்ந்த சி.பி.ஐ.,யில் பணியாற்றியவர். இதனால், அவர் விபரம் இல்லாதவர் என கூற முடியாது. காணாமல் போன மகளை கண்டுபிடிக்க, அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. 100க்கும் மேற்பட்ட பெண்களை புதைத்ததாக புகார்தாரர் கூறி உள்ளார். அப்படி பார்த்தால், 100 பெண்களின் குடும்பத்தினரும் போலீசில் புகார் அளிக்கவில்லையா என்றும் கேள்வி எழுகிறது.இதுகுறித்து விளக்கம் கேட்க, தட்சிண கன்னடா மாவட்ட எஸ்.பி.,க்கு மொபைல் போனில் அழைத்தும், அவர் ஏற்கவில்லை.








      Dinamalar
      Follow us