தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சேலைக்காக முட்டி மோதிய பெண்கள்

சேலைக்காக முட்டி மோதிய பெண்கள்

சேலைக்காக முட்டி மோதிய பெண்கள்


ADDED : மார் 12, 2024 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், வாக்குறுதித் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்து, மக்களின் ஆதரவைப் பெற ஆளும் காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதற்காக மாவட்டங்கள்தோறும் வாக்குறுதித் திட்டப் பயனாளிகள் மாநாடு நடத்துகிறது.

அந்த வகையில் கோலார், மாலுாரில் நேற்று மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலுாரின், கே.ஜி., ஹள்ளியில் நடந்த மாநாட்டில், பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

சேலை வழங்கும் தகவல் பரவியதும், பெருமளவில் பெண்கள் குவிந்தனர். 'நான், நீ' என, சேலை பெற முட்டி மோதிக் கொண்டனர். மாலுாரு காங்., - எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, மாநாட்டுக்கு வந்த பெண்களுக்கு, சேலை வழங்கியதாக தெரியவந்தது. பெருமளவில் பெண்கள் குவிந்தனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் பரிதவித்தனர்.

பெண்களை வரிசையாக நிற்க வைத்து, சேலை பெற்றுக் கொள்ளும்படி செய்தனர். சில நாட்களுக்கு முன்பு, பாகல்கோட்டில் இதுபோன்ற மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதும் உணவுக்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us