sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண்கள்

ADDED : ஜன 07, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:36 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில், 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநில தலைமை தேர்தல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. 5 கோடியே 52 லட்சத்து 8,565 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட, 78 ஆயிரத்து, 202 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் நாட்டில் உள்ள வாக்காளர்களின் பட்டியலை, மாநில வாரியாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகாவில் 2024 அக்., 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின், சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தி, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், நீக்கம் போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

* 5.52 கோடி

இதையடுத்து, 2025 ஜனவரி 1ம் தேதியன்று, ஓட்டு போட தகுதி பெற்ற, 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, கர்நாடக தலைமை தேர்தல் அலுவலகம், நேற்று வெளியிட்டது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடகாவில், 2 கோடியே 75 லட்சத்து 62 ஆயிரத்து 634 ஆண்கள்; 2 கோடியே, 76 லட்சத்து 40 ஆயிரத்து 836 பெண்கள்; 5,095 திருநங்கையர் என மொத்தம் 5 கோடியே, 52 லட்சத்து 8 ஆயிரத்து, 565 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், இறுதி வாக்காளர் பட்டியலில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 783 வாக்காளர்கள் அதிகமாகி உள்ளனர். அதாவது 72 ஆயிரத்து, 754 பெண்கள்; 30 ஆயிரத்து, 999 ஆண்கள்; 30 திருங்கையர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளனர்.

* பெங்., தெற்கு

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்படி, கர்நாடகாவில், ஆண் வாக்காளர்களை விட, 78 ஆயிரத்து 202 பேர் பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின், 224 சட்டசபை தொகுதிகளில், 7 லட்சத்து 67 ஆயிரத்து 416 வாக்காளர்களுடன் பெங்களூரு தெற்கில் அதிகபட்சமாகவும்; ஒரு லட்சத்து 68 ஆயிரத்து, 882 வாக்காளர்களுடன் சிருங்கேரியில் குறைந்தபட்ச வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் இறுதி வரை 14 லட்சத்து 99 ஆயிரத்து 447 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. புதிதாக 6 லட்சத்து 2 ஆயிரத்து 863 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்படும் பணி நடக்கிறது. 45 ஆயிரத்து 879 ஆக இருந்த சேவை வாக்காளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

* 100 வயது

இதுபோன்று 6 லட்சத்து 81 ஆயிரத்து 197 ஆக இருந்த இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 2 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 1 லட்சத்து 21 ஆயிரத்து 226 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். 6 லட்சத்து 38 ஆயிரத்து 857 ஆக இருந்த 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 6 லட்சத்து 36 ஆயிரத்து 551 ஆகவும்; 23 ஆயிரத்து 586 ஆக இருந்த 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 551 ஆகவும் குறைந்துள்ளது.

மாநிலத்தில், 6 லட்சத்து 28 ஆயிரத்து 554 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 58 ஆயிரத்து 932 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், இறுதி பட்டியலில் 20 லட்சத்து 84 ஆயிரத்து, 125 வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். 7 லட்சத்து 4 ஆயிரத்து 339 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து 92 ஆயிரத்து 271 பேர் தங்கள் முகவரி, பெயர் போன்ற திருத்தங்களை செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

...பாக்ஸ்...

சரி பாருங்கள்!

இறுதி வாக்காளர்கள் பட்டியலில், தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை, சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி வருவாய் அலுவலகத்தில், சரிபார்க்கலாம். https://voters.eci.gov.in அல்லது https://ceo.karnataka.gov.in/en என்ற இணையதள முகவரியிலும் காணலாம். தேவையெனில், 1950 அல்லது 180042551950 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுகொள்ளலாம்.

...பாக்ஸ்...

தேர்தல் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல்

தேர்தல் மாவட்டம் ஆண் பெண் 3ம் பாலினம் மொத்தம்

பெலகாவி 20,74,279 20,76,010 205 41,50,494

பாகல்கோட் 8,06,564 8,28,857 97 16,35,518

விஜயபுரா 9,94,270 9,70,991 247 19,65,508

கலபுரகி 11,76,170 11,64,009 339 23,40,518

பீதர் 7,40,462 7,05,938 45 14,46,445

ராய்ச்சூர் 8,39,059 8,73,592 262 17,12,913

கொப்பால் 5,85,175 6,00,243 71 11,85,489

கதக் 4,47,250 4,51,629 60 8,98,939

தார்வாட் 8,05,768 8,10,552 95 16,16,415

உத்தர கன்னடா 6,10,262 6,11,769 5 12,22,036

ஹாவேரி 6,80,643 6,61,665 41 13,42,349

பல்லாரி 5,98,387 6,25,198 213 12,23,798

சித்ரதுர்கா 7,09,048 7,20,420 87 14,29,555

தாவணகெரே 7,43,888 7,52,813 118 14,96,819

ஷிவமொக்கா 7,46,679 7,70,827 37 15,17,543

உடுப்பி 5,12,232 5,49,046 11 10,61,289

சிக்கமகளூரு 4,77,402 4,95,865 28 9,73,295

துமகூரு 11,40,384 11,65,030 88 23,05,502

சிக்கபல்லாப்பூர் 5,22,817 5,38,677 90 10,61,584

கோலார் 6,40,600 6,56,626 162 12,97,388

பெங்களூரு ரூரல் 4,46,918 4,58,659 147 9,05,724

ராம்நகர் 4,53,403 4,74,445 54 9,27,902

மாண்டியா 7,67,209 7,95,562 145 15,62,916

ஹாசன் 7,63,676 7,74,175 37 15,37,888

தட்சிண கன்னடா 8,84,373 9,29,115 68 18,13,556

குடகு 2,32,042 2,42,321 13 4,74,376

மைசூரு 13,64,454 14,10,720 228 27,75,402

சாம்ராஜ்நகர் 4,32,591 4,47,983 56 8,80,630

பெங்., சென்ட்ரல் 9,49,895 9,19,126 263 18,69,284

பெங்., வடக்கு 11,72,707 11,31,167 516 23,04,390

பெங்., தெற்கு 10,97,282 10,30,628 381 21,28,291

பெங்களூரு நகரம் 20,60,403 19,01,668 678 39,62,749

யாத்கிர் 5,20,102 5,23,543 69 10,43,714

விஜயநகரா 5,66,240 5,71,967 139 11,38,346

மொத்தம் 2,75,62,634 2,76,40,836 5,095 5,52,08,565

...பாக்ஸ்...

பெங்களூரில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர் இறுதி பட்டியல்

சட்டசபை தொகுதி ஆண் பெண் 3ம் பாலினம் மொத்தம்

ராஜராஜேஸ்வரிநகர் 2,61,946 2,49,667 79 5,11,692

சிவாஜிநகர் 98,558 98,615 11 1,97,184

சாந்திநகர் 1,17,881 1,16,058 55 2,33,994

காந்திநகர் 1,20,052 1,13,552 35 2,33,639

ராஜாஜிநகர் 1,05,575 1,03,876 14 2,09,465

சாம்ராஜ்பேட் 1,26,532 1,21,676 46 2,48,254

சிக்பேட் 1,19,351 1,15,682 23 2,35,056

கே.ஆர்.புரம் 2,86,935 2,66,772 166 5,53,873

மஹாலட்சுமி லே அவுட் 1,50,843 1,45,025 44 2,95,912

மல்லேஸ்வரம் 1,15,202 1,15,566 6 2,30,774

ஹெப்பால் 1,51,289 1,47,236 53 2,98,578

புலிகேசிநகர் 1,31,692 1,32,155 54 2,63,901

சர்வக்ஞர்நகர் 1,94,710 1,94,296 73 3,89,079

சி.வி.ராமன்நகர் 1,42,036 1,30,117 120 2,72,273

கோவிந்த்ராஜ்நகர் 1,56,176 1,48,059 41 3,04,276

விஜயநகர் 1,63,565 1,52,811 183 3,16,559

பசவனகுடி 1,20,170 1,16,654 2 2,36,826

பத்மநாபநகர் 1,46,765 1,43,514 25 2,90,304

பி.டி.எம்.லே அவுட் 1,45,474 1,35,258 50 2,80,782

ஜெயநகர் 1,09,121 1,08,963 14 2,18,098

பொம்மனஹள்ளி 2,56,011 2,25,369 66 4,81,446

எலஹங்கா 2,36,566 2,30,801 83 4,67,450

பேட்ராயனபுரா 2,76,722 2,61,452 126 5,38,300

யஷ்வந்த்பூர் 3,08,651 3,00,383 88 6,09,122

தாசரஹள்ளி 2,48,632 2,20,713 75 4,69,420

மஹாதேவபுரா 3,61,564 3,14,838 119 6,76,521

பெங்., தெற்கு 4,01,444 3,65,870 102 7,67,416

ஆனேக்கல் 2,26,824 2,07,611 85 4,34,520

மொத்தம் 52,80,287 49,82,589 1,838 1,02,64,714

பெங்களூரு, ஜன. 7-

கர்நாடகாவில், 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநில தலைமை தேர்தல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. 5 கோடியே 52 லட்சத்து 8,565 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட, 78 ஆயிரத்து, 202 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் நாட்டில் உள்ள வாக்காளர்களின் பட்டியலை, மாநில வாரியாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், கர்நாடகாவில் 2024 அக்., 29ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின், சிறப்பு வாக்காளர்கள் முகாம் நடத்தி, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், நீக்கம் போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

5.52 கோடி

இதையடுத்து, 2025 ஜனவரி 1ம் தேதியன்று, ஓட்டு போட தகுதி பெற்ற, 2025ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, கர்நாடக தலைமை தேர்தல் அலுவலகம், நேற்று வெளியிட்டது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடகாவில், 2 கோடியே 75 லட்சத்து 62 ஆயிரத்து 634 ஆண்கள்; 2 கோடியே, 76 லட்சத்து 40 ஆயிரத்து 836 பெண்கள்; 5,095 திருநங்கையர் என மொத்தம் 5 கோடியே, 52 லட்சத்து 8 ஆயிரத்து, 565 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் 29ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், இறுதி வாக்காளர் பட்டியலில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 783 வாக்காளர்கள் அதிகமாகி உள்ளனர். அதாவது 72 ஆயிரத்து, 754 பெண்கள்; 30 ஆயிரத்து, 999 ஆண்கள்; 30 திருங்கையர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன.

பெங்., தெற்கு

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்படி, கர்நாடகாவில், ஆண் வாக்காளர்களை விட, 78 ஆயிரத்து 202 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தின், 224 சட்டசபை தொகுதிகளில், 7 லட்சத்து 67 ஆயிரத்து 416 வாக்காளர்களுடன் பெங்களூரு தெற்கில் அதிகபட்சமாகவும்; ஒரு லட்சத்து 68 ஆயிரத்து, 882 வாக்காளர்களுடன் சிருங்கேரியில் குறைந்தபட்ச வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் இறுதி வரை 14 லட்சத்து 99 ஆயிரத்து 447 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது. புதிதாக 6 லட்சத்து 2 ஆயிரத்து 863 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்படும் பணி நடக்கிறது. 45 ஆயிரத்து 879 ஆக இருந்த சேவை வாக்காளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

100 வயது

இதுபோன்று 6 லட்சத்து 81 ஆயிரத்து 197 ஆக இருந்த இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 2 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 1 லட்சத்து 21 ஆயிரத்து 226 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். 6 லட்சத்து 38 ஆயிரத்து 857 ஆக இருந்த 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 6 லட்சத்து 36 ஆயிரத்து 551 ஆகவும்; 23 ஆயிரத்து 586 ஆக இருந்த 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 22 ஆயிரத்து 551 ஆகவும் குறைந்துள்ளது.

மாநிலத்தில், 6 லட்சத்து 28 ஆயிரத்து 554 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 58 ஆயிரத்து 932 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில், இறுதி பட்டியலில் 20 லட்சத்து 84 ஆயிரத்து, 125 வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். 7 லட்சத்து 4 ஆயிரத்து 339 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து 92 ஆயிரத்து 271 பேர் தங்கள் முகவரி, பெயர் போன்ற திருத்தங்களை செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      Dinamalar
      Follow us