ஒவ்வொரு துறையிலும் முத்திரையை பதிக்கும் பெண்கள்; பிரதமர் மோடி பெருமிதம்
ஒவ்வொரு துறையிலும் முத்திரையை பதிக்கும் பெண்கள்; பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : டிச 06, 2025 07:41 PM

புதுடில்லி: பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி சேனலின் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. இந்தியா தன்னம்பிக்கையின் பாதையின் நோக்கி செல்கிறது. இந்தியாவில் தற்போது பல்துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும், நாம் நிலையான வேகத்தில் வளர்ந்து வருகிறோம்.
எங்கள் நோக்கம் தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பது தான். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.21ம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டோம். உலகம் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. நிதி நெருக்கடி, உலகளாவிய தொற்றுநோய் பரவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள் வளர்ச்சி முக்கிய பங்கு வகித்துள்ளது.
பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கிறார்கள். சமூகத்தின் சிந்தனை மற்றும் திறன்கள் இரண்டையும் மாற்றியமைக்கிறார்கள். இந்தியாவின் விண்வெளித் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. நமது வடகிழக்கு மாநிலங்கள், நமது கிராமங்கள், பெண்கள் சக்தி, புதிய பொருளாதாரம், விண்வெளித் துறை உள்ளிட்ட பல விஷயங்கள் இதற்கு முன்பு ஆராயப்படவில்லை.
சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் கூட இப்போது தான் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு பூஜ்ஜிய வரி கொண்டு வரப்பட்டது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு கற்பனை கூட செய்ய முடியாத ஒரு சீர்திருத்தம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

