லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கோ! பிளைட்டில் வேற லெவல் 'propose' செய்த பெண்
லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கோ! பிளைட்டில் வேற லெவல் 'propose' செய்த பெண்
ADDED : ஆக 28, 2024 10:50 AM

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆண் நண்பரிடம் வித்தியாசமான முறையில் தமது காதலைச் சொன்ன இளம்பெண்ணின் love proposal வீடியோ வைரலாகி உள்ளது.
காதல் பிளான்
காதலிப்பது என்பது எல்லோராலும் முடியாது, அப்படியே காதலித்தவர்கள் தமது லவ்வை காதலிப்பவர்களிடம் கூறுவது என்பது தனி கலை. எப்படியும் காதலைச் சொல்லிவிட வேண்டும் என பிளான் பண்ணுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது எந்த அளவு சக்சஸ் ஆகும் என்பது தெரியாது.
அப்படி வித்தியாசமான முறையில் தமது காதலை ஆண் நண்பரிடம் கூறி அனைவரையும் 'வாவ்' சொல்ல வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். அது பற்றிய விவரம் வருமாறு; ஏற்பாடுகள்
ஐஸ்வர்யா பன்சால் என்ற இளம்பெண் தமது ஆண் நண்பர் அமுல்யா கோயல் உடன் விமானத்தில் சென்றிருக்கிறார். அந்த பயணத்தின் போது தமது காதலை சொல்லிவிடுவது என்பதே அவரது திட்டம். அதற்காக முன்னரே விமான சிப்பந்திகளிடம் சில ஏற்பாடுகளை செய்யச் சொல்லி கேட்டிருந்தார்.ஒலிபெருக்கி
அதன்படி இருவரும் விமானத்தில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். சிறிதுநேரத்தில் ஆண் நண்பர் தூங்கிவிட, இளம்பெண் நேராக இந்த விஷயத்தை விமான சிப்பந்திகளிடம் கூறி இருக்கிறார். அடுத்த சில விநாடிகளில் விமான ஒலிபெருக்கியில் அமுல்யா கோயலுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு காத்திருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது.கல்யாணம் பண்ணிக்கோ
திடும்மென தமது பெயரை கூப்பிடுவது அறிந்து எழுந்த அமுல்யா கோயல் தூக்க கலக்கத்தில் எழுந்து செல்கிறார். அடுத்த சில நொடிகளில் அவரெதிரே நடந்து வரும் ஐஸ்வர்யா கோயல் மண்டியிட்டு காதலைக் கூறி கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். முன்னரே தயாராக வைத்திருந்த மோதிரம் ஒன்றையும் ஆண் நண்பர் கையில் மாட்டி விடுகிறார்.பரிமாறிய அன்பு
அவருக்கு ஆதரவாக மற்றொரு வரிசையில் அமர்ந்திருக்கும் 4 பேர் will you marry me என்ற வாசகங்கள் எழுதி இருந்த பேப்பரை பிடித்தபடி திரும்ப விமானத்தில் மகிழ்ச்சியும், சிரிப்பொலியும் ஆரம்பமானது. பின்னர் இருவரும் கட்டியணைத்து ஒருவரை ஒருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். பின்னர் ஐஸ்வர்யா பன்சால், அமுல்யா கோயல் இருவருக்கும் விமான சிப்பந்திகள் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.நடுவானிலும் ஒலிக்கும்
காதலை வித்தியாசமாக சொல்லி அசத்திய ஐஸ்வர்யா பன்சால், நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு வெளியிட, ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காதல் என்பது இடம். பொருள் அறியாது, நட்ட நடுவானிலும் காதில் வந்து ஒலிக்கும் என்பது இதுதானோ...!