உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்
உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்
ADDED : நவ 12, 2024 12:05 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் பலத்த காயமுற்றனர்.
உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி., இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி, உயிரிழந்த பெண்களின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 'மண் சரிவில் சிக்கி, உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.