ADDED : ஜன 01, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரை, பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின், ஆறு பெண்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். இது சுகாதாரத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுகாதார துறை அமைத்த குழுவினர் விசாரித்த போது, காலாவதியான குளுக்கோஸ்களை உடலில் செலுத்தியதால் பெண்கள் இறந்தது தெரிந்தது.
உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய், அரசு அறிவித்தது. பெண்கள் மரணத்தால் எதிர்க்கட்சிகள் வெகுண்டு எழுந்தன. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

