பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இணைப்பை ஏற்க முடியாது; ராகுல்
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இணைப்பை ஏற்க முடியாது; ராகுல்
UPDATED : ஆக 08, 2026 07:53 PM
ADDED : ஆக 08, 2026 04:46 PM

புதுடில்லி: பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைப்பதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பார்லியில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், எதிர்க்கட்சி தலைவர் ராகுலுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து பேச்சுவார்த்த நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இருவரின் சந்திப்பின் போது, தொகுதி மறுவரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைப்பதை ஏற் முடியாது என ராகுல் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், பெண்களின் பேச்சு சுதந்திரம் குறித்து ராகுல் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு, 'ராகுலிடம் பெண்கள் குறித்து நேர்மறையான மாற்றத்தைக் காண முடிகிறது. காங்கிரஸ் கட்சி நிபந்தனையின்றி பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரளிக்க வேண்டும்,' எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த ராகுல், 'காங்கிரஸின் முழு ஆதரவுடன் கடந்த 2023ம் ஆண்டே இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. 3 ஆண்டுகள் கடந்தும் அது ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இப்போது ஏன் தேவையின்றி அதைத் தொகுதி மறுவரையறையுடன் இணைக்க முயற்சிக்கிறீர்கள்? எந்த நிபந்தனையும் இன்றி 2023ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உடனடியாக அமல்படுத்துங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு விளக்கமளித்த கிரண் ரிஜிஜு, 'ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கணிசமான நேரத்தை எடுக்கும். இதனால், 2034 லோக்சபா தேர்தல் வரை மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தப்படுவது தாமதமாகலாம். 2029 லோக்சபா தேர்தலிலிருந்தே இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், விரைவில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
