2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை கூட நீடிக்காது: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து
2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை கூட நீடிக்காது: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து
ADDED : ஜன 28, 2024 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மீண்டும் உருவாகியுள்ள பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, 2025ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை கூட நீடிக்காது என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.
பீஹாரில் நடந்த வரும் அரசியல் மாற்றம் குறித்து, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி பீஹாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும். இந்த கூட்டணி என்பது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள பீஹார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது.
தற்போது நிதீஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாக அறியப்படுகிறார். பா.ஜ.,வின் ஆதரவு பெற்ற தலைவராக இருக்கிறார். இருப்பினும் இந்த கூட்டணி என்பது நிலைக்காது. இதனை நான் எழுதி தருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

