ADDED : நவ 03, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெலமங்களா; சொர்க்கத்திற்கு செல்வோம் என்று நினைத்து, பண்டிகை நாளில் தொழிலாளி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா பூசந்திரா கிராமத்தில் வசித்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; தொழிலாளி. இவர், தனது மனைவியை 2022 நவம்பர் 11ம் தேதி கொலை செய்தார். இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், ஆறு மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தார்.
கடந்த சில தினங்களாக தனது நண்பர்களுடன் பேசும் போது, 'பண்டிகை நாளில் உயிரிழந்தால், சொர்க்கத்திற்கு சென்று விடலாம்' என்று கூறினார்.
நேற்று முன்தினம் காலையில், தீபாவளி பண்டிகையை, குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். இரவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பண்டிகை நாளில் உயிரிழந்தால், சொர்க்கத்திற்கு செல்வோம் என்று நினைத்து உயிரை மாய்த்தது தெரிந்தது.