சிறுமியை கடத்தி பலாத்காரம் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை
ADDED : மே 25, 2025 02:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:15 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை, ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்து கட்டப்பனை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரளா எர்ணாகுளம் மாவட்டம் பெரும் படப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெனிக்ஸ் 40. இவர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் 2014ல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கட்டப்பனை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். வழக்கு விசாரணை கட்டப்பனை அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போத தலைமறைவான பெனிக்ஸ், பின்னர் வேறொரு வழக்கில் சிக்கினார். இந்நிலையில் பலாத்கார வழக்கில் பெனிக்ஸ்க்கு 30 ஆண்டுகள் சிறை, ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி மஞ்சு தீர்ப்பளித்தார்.