ADDED : ஜூலை 26, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தொழிற்சாலை கூரை இடிந்து விழுந்து காயம் அடைந்த இரு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
வடகிழக்கு டில்லி நியூ உஸ்மான்பூரில் இரும்பு ஸ்டாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையின் கூரை, நேற்று முன் தினம் மாலை 6:00 மணிக்கு இடிந்து விழுந்தது.
இடிபாட்டுக்குள் சிக்கிய தாஜிம்,25, அக்ரம் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அக்ரம் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

