ADDED : அக் 17, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில், தமிழ், ஆங்கில கவிஞரும், எழுத்தாளருமான வானவில் ரவியின், எழுத்து உலகம் குறித்து, வரும் 23ம் தேதி அரசு விக்டோரியா கல்லூரியில் பயிலரங்கம் நடைபெறுகிறது.
உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீலுமான வானவில் ரவியின், எழுத்துக்கள் குறித்து, கடந்த 2015 முதல் இதுவரை 122 பயிலரங்கம், பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.
இந்த பயிலரங்க ஏற்பாடுகளை, மைய இயக்குனரும் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி தமிழ் துறை முன்னாள் தலைவருமான முனைவர் ராஜாராம், தமிழ் கலை மன்றம் செயலாளர் மாதவன், கல்லூரி தமிழ் துறை தலைவர் சுஜானா பானு, உதவி பேராசிரியர் ராதா ஆகியோர் செய்து வருகின்றனர்.