தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முட்டையில் ஊறிய புழுக்கள்... பிளிங்கிட் நிறுவன கிடங்கில் அதிகாரிகள் ரெய்டு

முட்டையில் ஊறிய புழுக்கள்... பிளிங்கிட் நிறுவன கிடங்கில் அதிகாரிகள் ரெய்டு

முட்டையில் ஊறிய புழுக்கள்... பிளிங்கிட் நிறுவன கிடங்கில் அதிகாரிகள் ரெய்டு

3


ADDED : செப் 04, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : செப் 04, 2026 08:01 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு: கர்நாடகாவில் முட்டைகளில் புழுக்கள் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, பிளிங்கிட் (Blinkit) நிறுவன கிடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.

பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் விநியோகத் தளமான பிளிங்கிட் மூலம் மங்களூருவைச் சேர்ந்த ஒருவர், கோழி முட்டைகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த முட்டையை எடுத்து பார்த்த போது, அதில் புழுக்கள் ஊறிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது தொடர்பாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பல்நிர் ஸ்கொயரில் இயங்கும் பிளிங்கிட் நிறுவன கிடங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, சேதமடைந்த முட்டைகள் அடங்கிய பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள ஜெப்டோ கிடங்கில் உணவுப் பாதுகாப்புத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தூக்கி எறியப்பட்ட கவர்கள் மற்றும் பாட்டில்கள் கண்டறியப்பட்டதோடு, முறையற்ற லேபிளிங் மற்றும் சுகாதாரமற்ற உணவு கையாளுதல் போன்ற விதிமீறல்களால், அந்த கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

ஏற்கனவே, துக்காராம் முண்டே கலக்கி வரும் மஹாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள பிளிங்கிட் நிறுவனத்தில் சுகாதார மற்றும் சேமிப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநில உணவு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us