பா.ஜ.,வுக்கு ஆதரவளித்த சமாஜ் வாடி கட்சி எம்.எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
பா.ஜ.,வுக்கு ஆதரவளித்த சமாஜ் வாடி கட்சி எம்.எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
ADDED : மார் 24, 2024 08:15 PM

லக்னோ: ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி பா.ஜ.வுக்கு வாக்களித்த சமஜ்வாடிகட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
உ.பி., மாநிலத்தில் கடந்த பிப்., மாதத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. கட்சியின் அடிப்படையில் பா.ஜ.,வுக்கு 7 இடங்களுக்கும் சமஜ்வாதிகட்சிக்கு மூன்று இடங்களுக்கும் போட்டியிட்டன. ஆனால் ஆளும் பா.ஜ., கூடுதலாக எட்டாவது வேட்பாளரை களம் இறக்கியது. இதனால் குதிரை பேரம் நடைபெறும் என கணக்கிடப்பட்டது. அதே போல் தேர்தல் நடைபெற்ற தினத்தில் சமஜ்வாடி கட்சியை சேர்ந்த எம். எல்.ஏக்கள் ஒரு சிலர் கட்சி மாறி பா.ஜ.,வுக்கு வாக்களித்தனர். இதன் காரணமாக பா.ஜ., வின் எட்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சமஜ்வாதி சார்பில் மூன்று பேர்களுக்கு பதிலாக இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்நிலையில் கட்சி மாறி வாக்களித்த சமஜ்வாதிகட்சி எம்.எல்.ஏ.,க்களான அபய்சிங். மனோஜ் குமார் பாண்டே, ராகேஷ் பிரதாப்சிங், மற்றும் வினோத் சதுர்வேதி ஆகியோருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலுக்கு பிறகு அவர்கள் தங்களுக்கு கிடைத்த பேக்கேஜ் மற்றும் பாதுகாப்பு காரணமாக பா.ஜ.,வுக்கு சென்று விட்டனர் என்றார்.

