மன்னர் குடும்பத்தின் யதுவீர் மனைவி மீண்டும் கர்ப்பம்?
மன்னர் குடும்பத்தின் யதுவீர் மனைவி மீண்டும் கர்ப்பம்?
ADDED : அக் 06, 2024 08:37 PM

மைசூரு:
மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாரின் மனைவி திரிஷிகா குமாரி மீண்டும் கருவுற்று இருப்பதாக கூறப்படுகிறது.
மைசூரு மன்னர் குடும்பத்தின் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் மறைவுக்கு பின், 2015ல் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாரை, பிரமோதா தேவி தத்தெடுத்தார்.
அதன் பின், ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷிகா குமாரியுடன் 2016ல் யதுவீருக்கு திருமணம் நடந்தது. 2017ல் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆத்யவீர் என பெயர் சூட்டினர்.
தம்பதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றில்லாமல், சாதாரண மக்கள் போன்று அனைவரிடமும் எளிமையாக பழகி வந்தனர்.
மைசூரு தசராவின் முதல் நாளில், தங்க சிம்மாசனத்தில் யதுவீர் அமருவதற்கு முன்பு, அவரது மனைவி திரிஷிகா குமாரி, சேலை அணிந்து வந்திருந்தார்.
தனது வயிற்றை மறைக்கும் வகையில், மேலே ஒரு சால்வையும் போர்த்தியிருந்தார்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த விழாக்களில் சால்வை அணிந்ததில்லை. இந்தாண்டு புதிதாக சால்வை அணிந்திருந்தது, கவனத்தை ஈர்த்தது. அத்துடன், தனது வயிற்றின் மீது கைகளை வைத்தபடி இருந்தது யூகத்தை அதிகரித்தது. ஒருவேளை அவர் மீண்டும் கருவுற்றிருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அரண்மனை குடும்பத்தினர் உறுதி செய்யவில்லை.