ADDED : ஆக 08, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டில்லியில் யமுனையின் நீர்மட்டம் நேற்று காலை, 8:00 மணிக்கு, 205.10 மீட்டரை எட்டியது.
பழைய ரயில்வே பாலத்தில் 205.33 மீட்டராக இருந்த நீர்மட்டம் அபாய அளவைத் தொட இன்னும் சில அடிகள்தான் உள்ளன. இதுவே, நேற்று முன்தினம், 204.88 மீட்டராக இருந்தது. யமுனை கரையோரம் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹத்னிகுண்ட் அணையில் இருந்து, 24,613 கனஅடி; வஜிராபாத் தடுப்பணையில் இருந்து 46,290 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த, 2023ல், யமுனை நீர்மட்டம், 208.66 மீட்டரை எட்டி, மாநகருக்குள் வெள்ளம் புகுந்தது.