அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா
ADDED : ஏப் 05, 2025 06:58 PM

புதுடில்லி: டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பிடிப்பட்ட வழக்கில் விசாரணையில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, இன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அவரது வீட்டில் கணக்கில் காட்டப்படாத, கத்தை கத்தையாக பணம் கண்டுடெடுக்கப்பட்டது.இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. வர்மா இதுவரை இந்த குற்றச்சாட்டுகளை,வெளிப்படையாக மறுக்கவில்லை, ஆனால் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்தது.ஆனால், சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் எடுத்த இந்த முடிவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்தது. நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா.இருப்பினும், வர்மாவுக்கு எதிரான உள் விசாரணை தொடரும் வரை அவருக்கு எந்த நீதித்துறைப் பணியும் ஒதுக்கப்படாது. அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பிறகு, நீதிபதி வர்மா சீனியாரிட்டியில் ஆறாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.