‛‛யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்'': ராகுல் பேச்சு
‛‛யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்'': ராகுல் பேச்சு
ADDED : ஜன 29, 2024 01:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ‛‛நாட்டில் எனது யாத்திரையால் நிச்சயம் மாற்றம் வரும்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட பாரத் ஒற்றுமை யாத்திரையை கடந்த 14ல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் துவக்கினார்.
பீஹார் மாநிலம் கிஷன்கஞ்சில் இன்று (ஜன.,29) யாத்திரையை மேற்கொண்ட ராகுல் பேசியதாவது: இந்த யாத்திரையின் நோக்கம் என்ன என்று பலர் என்னிடம் கேட்டார்கள். நான் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ்., -பா.ஜ.,வின் சித்தாந்தம் வெறுப்பை பரப்பியுள்ளது.
ஒரு மதம் மற்றொரு மதத்துடன் சண்டையிடுகிறது. சகோதரர்கள் சகோதரர்களுடன் சண்டையிடுகிறார்கள். இந்த யாத்திரை நாட்டின் அரசியலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் மாற்றம் வரும் என்றேன். இவ்வாறு ராகுல் பேசினார்.