ADDED : ஜூலை 14, 2011 06:15 AM
புதுடில்லி: கர்நாடகா மாநிலத்தில் அமைய உள்ள இரு அனல் மின்நிலையங்களுக்கு ஒப்புதல் தர கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் எடியூரப்பா இன்று சந்தித்து பேச உள்ளார்.
கர்நாடகாவில் மின்வெட்டு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் எல்டபூரா மற்றும் காட்ஹனா ஆகிய அனல் மின்நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அனல் மின் நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்று வழங்கப்பட்டாதல் தான் அனல் மின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கமுடியும். அதற்கானஅனுமதியினை பெற இன்று எடியூரப்பா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தி்த்து பேசுகிறார். அவருடன் கர்நாடக மாநில மின்துறை அமைச்சர் ஷோபாவும் செல்கிறார். இது குறித்து எடியூரப்பா கூறுகையில், கர்நாடகாவில் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் அமைப்பதற்கு பெல்லாரி மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் இதற்கான எரிபொருள் வளம் இல்லை என்பதால், சத்தீஸ்கர் மாநிலத்திடமிருந்து நிலக்கரி பெறப்பட்டு மின் உற்பத்தி துவங்கப்படும். முன்னதாக அனல் மின்நிலையங்களுக்கு பிரதமர் அனுமதி அளிப்பார் என நான் நம்புகிறேன். கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் .இவ்வாறு எடியூரப்பா கூறினார்.