உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 24, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
‘இஸ்ரோ’வை
நசுக்குவது
நியாமல்ல!
நாட்டின் அணுசக்தி துறையை போலவே, விண்வெளித் துறையிலும் தீவிர தனியார்மயமாக்க கொள்கையை செயல்படுத்தி, ‘இஸ்ரோ’வை மத்திய அரசு நசுக்கப் பார்க்கிறது. இஸ்ரோவின் ராக்கெட் மேம்பாடு மற்றும் தயாரிப்பு பணிகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, செயற்கைக்கோள் தொடர்பான திட்டங்கள் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மாற்றப்படவுள்ளன.
இதன் மூலம், நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளமான ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. விண்வெளித் துறையில், ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பது வரவேற்கத்தக்கதே. அதே சமயம், இஸ்ரோவை நசுக்கப் பார்ப்பது நியாயமல்ல.
ஜெய்ராம் ரமேஷ்
பொதுச் செயலர், காங்.,
