sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

/

10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை


ADDED : டிச 11, 2024 11:55 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'பத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என, பெங்களூரு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.

இதனால் பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா, குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், துமகூரு ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வடக்கு உள்பகுதியில் வறண்ட காற்று இருக்கும். வடக்கு உள்பகுதியில் ஒரு சில இடங்களில், பனிமூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு நகர மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகமூட்டமான வானிலை காணப்படும். சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 26 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்ஷியசும் வெப்ப நிலை இருக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us