நேற்று பாலஸ்தீனம்: இன்று வங்கதேசம்: பிரியங்கா கொண்டு வந்த பையால் பரபரப்பு
நேற்று பாலஸ்தீனம்: இன்று வங்கதேசம்: பிரியங்கா கொண்டு வந்த பையால் பரபரப்பு
UPDATED : டிச 17, 2024 04:50 PM
ADDED : டிச 17, 2024 04:46 PM

புதுடில்லி: நேற்று பாலஸ்தீன ஆதரவு பையுடன் வந்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, இன்று வங்கதேசத்தில் சிறுபான்மையினர் படும் துயரங்கள் கொண்ட வாசகம் கொண்ட பையுடன் வந்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா துவக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். நேற்று பார்லிமென்டிற்கு வந்த பிரியங்கா, கையில் ஒரு பையை வைத்து இருந்தார். அதில், பாலஸ்தீனம் என்று அச்சிடப்பட்டு இருந்தது. மேலும், பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட பையுடன் பிரியங்கா வந்தார். அதில், '' வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்,'' என அச்சிடப்பட்டு இருந்தது. இதேபோன்ற பையை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கொண்டு வந்தனர்.
நேற்று லோக்சபாவில் பூஜ்ஜிய நேரத்தில் பிரியங்கா பேசும் போது வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான துயரங்கள் குறித்த விவகாரத்தை அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு எழுப்ப வேண்டும். வங்கதேச அரசுடன் ஆலோசனை நடத்தி வேதனையில் உள்ளவர்களுக்கு ஆதரவான முடிவை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி இருந்தார்.

