அதானியை பாதுகாப்பதில் நீங்கள் பிஸி; சாமானியர்களுக்கு எப்போது பாதுகாப்பு: கேட்கிறார் ராகுல்
அதானியை பாதுகாப்பதில் நீங்கள் பிஸி; சாமானியர்களுக்கு எப்போது பாதுகாப்பு: கேட்கிறார் ராகுல்
ADDED : நவ 10, 2024 08:50 AM

புதுடில்லி: சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் என பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். நீங்கள் அதானியை பாதுகாப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள் என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹார் மாநிலம், பரோனி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின் போது ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பணியின் போது ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்த விவகாரத்திற்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சாமானியர்கள் எப்போது பாதுகாப்பாக இருப்பார்கள் என பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். நீங்கள் அதானியை பாதுகாப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள்.
ரயில்வே துறையில் போதிய ஆட்சேர்ப்பு நடக்காததே விபத்துக்களுக்கு காரணம். வேண்டுமென்றே குறைந்த ஆட்சேர்ப்பு ஆகியவற்றின் விளைவுதான் ரயில் விபத்து நடப்பதற்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.