ADDED : அக் 26, 2024 11:43 PM

என் தேர்தல் அரசியல் பயணத்தில், வயநாடு மக்களாகிய நீங்கள் தான் என் வழிகாட்டி மற்றும் ஆசான்கள். மக்கள் பிரதிநிதியாவதற்காக போட்டியிடும் என் முதல் பயணம் இது. ஆனால், மக்களுக்காக போராடுவது, என் வாழ்க்கையுடன் கலந்த ஒன்று. அந்த போராட்டம் தொடரும்.
பிரியங்கா, பொதுச்செயலர், காங்கிரஸ்
சகிக்க முடியாது!
தனிநபரின் பிரச்னையை தீர்ப்பதில் ஏதேனும் தடைகள் இருந்தால், அவற்றை கண்டறிந்து விரைவாக பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மக்கள் பிரச்னை வேண்டுமென்றே தீர்க்கப்படாமல் விடப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் அதற்கு பொறுப்பு.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
எதிர்கால சந்ததியினர்!
தெலுங்கு தேசம் கட்சியின் கதை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்தனர். இந்த கட்சி இப்போதும், எப்போதும் இருக்கும். எதிர்கால சந்ததியினரிடம் கட்சியை ஒப்படைக்கும் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசம்