ADDED : ஏப் 06, 2025 12:32 AM

வக்ப் வாரியம் நாடு முழுதும் நிலங்களை எந்த அடிப்படையும் இன்றி உரிமை கோரி வந்தது. வக்ப் வாரியம் நில மாபியாவாக மாறிவிட்டதா என்று கேட்கும்படி அதன் செயல் இருந்தது. புதிய சட்டத் திருத்தத்தால் இப்போது யாரும் நிலங்களை கொள்ளை அடிக்க முடியாது.
யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,
விலை உயர்வு நல்லது!
கர்நாடகாவில் பால் விலையை உயர்த்தியது குறித்து பா.ஜ.,வினர் அரசை விமர்சிக்கின்றனர். விலைவாசியை பல மடங்கு உயர்த்தி அனைத்து தரப்பு மக்களை சிரமப்படுத்தி வருவதே மத்தியில் ஆளும் பா.ஜ., தான். நாங்கள் பால் விலையை உயர்த்தியது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்.
சிவகுமார், கர்நாடக துணை முதல்வர், காங்கிரஸ்
போராடுவது சிறு குழு!
வக்ப் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு உட்பட்டது. இது பெரும்பாலான முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்கும். முஸ்லிம்களில் உள்ள ஒரு சிறு குழுவினர் வக்ப் சொத்துக் களை கைப்பற்றி, அதை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் தான் சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
மனோஜ் திவாரி, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

