தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
ADDED : நவ 07, 2025 03:10 PM

பாட்னா; பணியில் இருந்து நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் சட்டசபை முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளின் கவனமும், 2ம் கட்ட ஓட்டுப்பதிவை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. 2ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
இந் நிலையில், ரெகா என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியதாவது;
ஞானேஷ்குமார்... நீங்கள் நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. பொதுமக்களே, ஞானேஷ்குமார் என்ற இந்த பெயரை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள்.
ஹரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரசாத்தின் போது தேர்தல் கமிஷனர்களாக அவருடன் (ஞானேஷ்குமார்) பணியாற்றும் எஸ்.எஸ். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பெயர்களை குறிப்பிட்ட பிரியங்கா, அவர்களது பெயர்களையும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.

