ADDED : ஜன 19, 2024 12:36 AM
ஷிவமொகா : ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், தாசனகூடிகே கிராமத்தில் வசிப்பவர் வித்யார்த், 38. இவரும், பிஜ்வலா கிராமத்தை சேர்ந்த ஷமிதா, 24, என்பவரும் பரஸ்பரம் காதலித்தனர். பெற்றோரின் சம்மதத்துடன், எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
வித்யார்த் நேற்று முன் தினம், இரவு ஷிப்ட் பணிக்கு சென்றிருந்தார். இவரது தாய், தந்தையும், மனைவி ஷமிதாவும் வீட்டில் இருந்தனர்.
உணவு முடிந்த பின், தாய், தந்தை உறங்க சென்றனர். ஷமிதாவும் தன் அறைக்கு சென்றார். நேற்று காலை 10:00 மணிக்கு மேலாகியும், இவரது அறை கதவு திறக்கப்படவில்லை.
சந்தேகமடைந்த பணியாட்கள், ஜன்னலை திறந்து பார்த்த போது, ஷமிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
ஷமிதா தற்கொலைக்கு முன் எழுதி வைத்துள்ள கடிதம் கிடைத்தது. அதில் தனக்கு உடல் நிலை பாதிப்பு உள்ளதால், தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

