கழுத்தை நெரித்து கர்ப்பிணி கொலை காதலனுக்கு உதவிய இளைஞர் கைது
கழுத்தை நெரித்து கர்ப்பிணி கொலை காதலனுக்கு உதவிய இளைஞர் கைது
ADDED : டிச 07, 2024 09:35 PM
புதுடில்லி:ஏழு மாத கர்ப்பிணியை கொன்று உடலை புதைத்த விவகாரத்தில் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் காதலர் உட்பட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடில்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்த 19 வயது கர்ப்பிணி கடந்த அக்.,21ல் மாயமானார். குடும்பத்தினர் அளித்த புகார்படி நங்லோய் போலீசார் அக்., 24ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
பெண்ணின் காதலர் சலீம் என்ற சஞ்சு, அவரது நண்பர்கள் சோஹித் மற்றும் பங்கஜ் ஆகியோர் கர்ப்பிணி பெண்ணைக் கடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சலீம் மற்றும் பங்கஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கடத்திச் சென்ற பெண்ணை மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து, ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மதீனா கிராமத்தில் உடலை புதைத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த சோஹித்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ரகசிய தகவல் அடிப்படையில், ஹரியானா மாநிலம் ரோஹ்தக் சிங்கசன் பேங்க்வெட் அருகே பதுங்கி இருந்த சோஹித்தை நேற்று கைது செய்தனர்.
சலீம் கேட்டுக்கொண்டதால் அவரது காதலியான கர்ப்பிணியை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார்.
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.