பூ விற்கும் தாயிடம் ஐபோன் கேட்டு அடம்; இப்படி ஒரு மகன் தேவையா என நெட்டிசன்கள் கொந்தளிப்பு
பூ விற்கும் தாயிடம் ஐபோன் கேட்டு அடம்; இப்படி ஒரு மகன் தேவையா என நெட்டிசன்கள் கொந்தளிப்பு
ADDED : ஆக 19, 2024 10:31 AM

புதுடில்லி: வறுமையில் வாடும் தாயிடம், அவரது மகன் அடம்பிடித்து 3 நாள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, ஐபோன் வாங்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
செல்போன்கள்
இன்றைய இளம் தலைமுறையினர் கைகளில் செல்போன் இல்லாமல் பார்க்கவே முடியாது. கண்ணே கண்ணு அதுவும் ஒண்ணே ஒண்ணு என்பது போல் கைகளில் புதுப்புது மாடல்களில் 2 செல்போன்களை வைத்துக் கொண்டு வலம் வருகின்றனர்.வைரல் வீடியோ
வசதி இல்லை என்றாலும் மிகவும் காஸ்ட்லியான லேட்டஸ்ட் மாடல் செல்போனை எப்பாடுபட்டாவது பெற்றோரிடம் அடம்பிடித்து வாங்கி விடுகின்றனர். வட இந்தியாவில் அப்படி அரங்கேறிய ஒரு சம்பவம் தான் இப்போது வீடியோவாக உருமாறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.3 நாள் உண்ணாவிரதம்
கோயில் முன்பு பூ வியாபாரம் செய்து வரும் ஏழைத்தாய் ஒருவரிடம் அவரது மகன் தமக்கு ஐபோன் தான் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். தாய் மறுக்கவே.... உச்சப்பட்ச கோபத்தில் 3 நாட்களாக ஆகாரம் எதுவுமின்றி, தண்ணீர் குடிக்காமல் பட்டினி போராட்டம் நடத்தி உள்ளார்.கத்தையாய் பணம்
மகனின் பிடிவாதம், பட்டினி போராட்டம் கண்டு மனம் வருந்திய ஏழைத்தாய், எங்கெங்கோ பணத்தை புரட்டி, வட்டிக்கும் கடன் வாங்கி ஐபோன் வாங்க மகனிடம் கொடுத்துள்ளார். கத்தையாக தாய் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு செல்போன் கடைக்கு இளைஞன் சென்றுள்ளார்.கடை உரிமையாளர்
அங்கு அவரை கண்டு சிலர் என்ன விவரம் என்று கேட்டுள்ளனர். இதைக் கண்ட கடை உரிமையாளர் அதை வீடியோவாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். தமக்கு ஐபோன் வேண்டும் என்று தாயிடம் அடம்பிடித்ததை அவர் பெருமையாக கூற, வீடியோவை கண்ட பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.விமர்சனம்
மகனின் பிடிவாதத்தை விமர்சிக்கும் பலரும், தாயின் செயலையும் விட்டுவைக்கவில்லை. குடும்பத்தின் நிலை,பணத்தின் அருமை ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதை விட்டு செல்லம் கொடுப்பதாக விமர்சித்துள்ளனர். 'இப்படி ஒரு மகன் தேவையா' என்பதே நெட்டிசன்கள் பலரது விமர்சனமாக உள்ளது.இன்னும் சிலர் இன்று ஐபோன் கேட்டு அடம் பண்ணிய இளைஞர் நாளை என்னவெல்லாம் கேட்பார்? அதை அந்த ஏழைத்தாயால் வாங்கித் தரமுடியுமா? என்று கொந்தளித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

