ADDED : செப் 25, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்,:கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே கிழக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 40. 2022 ஆகஸ்ட் மூன்றாம் தேதி திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தனியாக இருந்த 91 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தார்.
மூதாட்டியின் இரண்டரை பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பினார். விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஜயகுமாருக்கு இரட்டை ஆயுள் சிறை, 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து இரிஞ்ஞாலக்குடா விரைவு நீதிமன்ற நீதிபதி விவீஜா சேது மோகன் உத்தரவிட்டார்.