ADDED : நவ 17, 2024 11:54 PM

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில், வீடுகளுக்குள் இரவு நேரத்தில் புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஜய் நிஷாத். கடந்த 2022ல் குழந்தைகள் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், ஆறு மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார்.
சிறிது காலம் குஜராத்தின் சூரத்தில் தங்கிய அஜய் நிஷாத், கோரக்பூருக்கு மீண்டும் வந்தார்.
கோரக்பூரில் உள்ள வீடு ஒன்றினுள் ஜூலை 30ம் தேதி இரவு நுழைந்த அஜய் நிஷாத், துாங்கிக் கொண்டிருந்த பெண்ணை தலையில் பலமாக தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பினார்.
இதே பாணியில், ஆக., 12ல் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அஜய் நிஷாத் தாக்கினார். இதில் அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து ஆக., 26, நவ., 10 மற்றும் 14ல், கோரக்பூரின் பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்த போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன்படி அஜய் நிஷாத்தை போலீசார் கைது செய்தனர்.