ADDED : ஆக 17, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கண்ணநல்லுார் அருகே, 65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த, 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, 65 வயதான மூதாட்டி, நேற்று முன்தினம் காலை அருகில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த இளைஞர் அந்த மூதாட்டியை, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு துாக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து தப்பினார்.
இதுகுறித்து, அந்த மூதாட்டி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், அந்த, 27 வயது நபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.