ADDED : ஆக 09, 2025 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:முன்விரோதம் காரணமாக, இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு டில்லி, நந்த் நகரியில், கபில், 28, மற்றும் சிவம் யாதவ், 20, ஆகியோருக்கு இடையே முன்விரோதம் காரணமாக நேற்று அதிகாலை தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவம், துப்பாக்கியால் கபிலை சுட்டு விட்டு தப்பினார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், கபிலை மீட்டு, ஜி.டி.பி., மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணம் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நந்த் நகரி போலீசார், சிவம் யாதவை கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக கபிலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.