ADDED : ஜூன் 07, 2025 09:39 PM
புதுடில்லி:வடகிழக்கு டில்லி கோகல்புரியில் நடந்த கொள்ளை தொடர்பாக, வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஏப்ரல், 17ம் தேதி வஜிராபாத் சாலையில் மின்சார ரிக்ஷாவில் பயணம் செய்தார். அந்த ரிக்ஷா கோகல்புரி மேம்பாலம் அருகே சென்றபோது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள், அந்தப் பெண் கையில் வைத்திருந்த மொபைல் போனை பறிக்க முயன்றனர். இதில், அந்தப் பெண் ரிக்ஷாவில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். ஜி.டி.பி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, கோகல்புரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தை சேர்ந்தவர் அமன்,23, என்பவர் கொள்ளை அடிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. கோகல்பூர் அருகே, அமன் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
அவர் ஓட்டி வந்த பைக், பஜன்புராவில் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் மற்றும் மற்றொரு பைக் மீட்கப்பட்டன. அமன் மீது ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் விசாரணை நடக்கிறது. அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.