UPDATED : செப் 08, 2025 07:20 AM
ADDED : செப் 08, 2025 01:40 AM

புதுடில்லி,:மங்கோல்புரி ஹோட்டலில் மது விருந்தின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். கொலை செய்த நண்பர்களை போலீசார் தேடுகின்றனர்.
டில்லி மங்கோல்புரியில் வசிக்கும் ரிங்கா டெதா அவரது நண்பர்கள் ரஹ்மான், ஹர்ஷ் டெதா, அமன், விக்கி மற்றும் அனில் ஆகியோருக்கு
குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில், 5ம் தேதி இரவு விருந்து அளித்தார். மது அருந்திய போது நண்பர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ரஹ்மான் பீர் பாட்டிலால் ரிங்கா டெதா தலையில் அடித்தார்.
பதிலுக்கு ரிங்காவும் ஹர்ஷும் இணைந்து ரஹ்மானை சரமாரியாகத் தாக்கினர்.
மயங்கிய ரஹ்மானை காஜிப்பூரில் உள்ள ரிங்கா டெதாவின் பால் பண்ணைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, யமுனை நதியில் ரஹ்மானை வீச திட்டமிட்டனர்.
ஆனால், விக்கி, அமன் மற்றும் அனில் ஆகியோர் அதைத் தடுத்து, ரஹ்மானை காரில் ஏற்றி புராரி சாண்ட் நகருக்கு அழைத்துச் சென்று அவரது சகோதரரிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஹ்மான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ரஹ்மானின் சகோதரர் ஹபீப் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த ரோஹிணி தெற்கு போலீசார், ரிங்கா டெதா, ஹர்ஷ் டெதா, அமன், விக்கி மற்றும் அனில் ஆகியோரை தேடி வருகின்றனர்.