ADDED : டிச 27, 2024 11:36 PM
புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் பாக்பாட் பகுதியை சேர்ந்த ஜிதேந்தர், 26,  என்பவர் கடந்த 25ம் தேதி டில்லியில் உள்ள புதிய பார்லிமென்ட் கட்டடம் அருகே வந்தார். திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார்.
போலீசார் அவரை மீட்டு ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, ஜிதேந்தர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜிதேந்தர் குடும்பத்தினர் தங்கள் பக்கத்து வீட்டாரை தாக்கியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஜிதேந்தர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், ஜிதேந்தர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

