ADDED : ஏப் 15, 2024 09:55 PM

கோட்டயம்: கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் பதுங்கியிருந்த பாம்பு பயணியை கடித்த சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள குருவாயூரில் இருந்து மதுரைக்கு குருவாயூர் -மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை குருவாயூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயில் கோட்டயம் அருகே உள்ள எட்டுமனூர் வந்த போது, தென்காசி செல்வதற்காக கார்த்தி என்ற இளைஞர் ரயிலில் 6 வது பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது ரயில் இருக்கைக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பு இளைஞரை கடித்தது.
உடன் அங்கிருந்தவர்கள் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற் று வருகிறார்.
இருக்கைக்கு அடியில் பாம்பைக் கண்டதாக சக பயணிகளும் கூறினர். இதையடுத்து எட்டுமனூர் ரயில் நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் பாம்பு புகுந்ததாக சொல்லப்படும் ஆறாவது பெட்டியை ரயில்வே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

