ADDED : ஆக 17, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பைக் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த வழக்கில் கார் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு டில்லி சுதர்ஷன் பூங்காவைச் சேர்ந்தவர் அம்ரீந்தர் சிங், 25. கடந்த, 15ம் தேதி இரவு, தார் சொகுசு காரில் சென்றார்.
அப்போது முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதியது. பைக்கில் சென்ற பிஷூலால், 40, தூக்கி வீசப்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தார். ஆனாலும், காரை நிறுத்தாமல் அம்ரீந்தர் சென்றார்.
அதிவேகமாக சென்ற கார், எதிரில் வந்த லாரியுடன் மோதியது. இதையடுத்து, காரில் இருந்து இறங்கி அம்ரீந்தர் சிங் தப்பி ஓடினார்.இந்த விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்து கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அம்ரீந்தர் சிங்கை நேற்று கைது செய்தனர், விசாரணை நடக்கிறது.