ADDED : ஜன 11, 2024 03:49 AM
பெலகாவி: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இளைஞர் ஒருவர் பூச்சிகொல்லி மருந்தைக் குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.
பெலகாவி, கோகாக்கின், லகமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் கல்லப்பா கொப்பதா, 23.
இவர் நேற்று மதியம், பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
“கலெக்டரை பார்க்க வேண்டும்,” என, கூறினார். கலெக்டர் இல்லாததால், ஊழியர்கள் காத்திருக்கும்படி கூறினர். சிறிது நேரம் அங்கும், இங்கும் நடமாடிய அவர், குடிநீர் பாட்டிலில் கொண்டு வந்திருந்த பூச்சுகொல்லி மருந்தைக் குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.
மயங்கி விழுந்த அவரை, போலீசார் உடனடியாக மருத்துவனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
'அவர் என்ன காரணத்துக்காக, தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது தெரியவில்லை. அவர் குணமடைந்த பின்னரே தெரியும்' என, போலீசார் கூறியுள்ளனர்.